அஜித் படமும், விக்ரம்&ஷங்கர் கூட்டணி படமும் செய்த சாதனையை தங்கள் தளபதியும் செய்வார் என்ற அவர்களின் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறார் விஜய்.
கடந்த 21ஆம் தேதி வெளியான ‘புலி’ டீஸர் 13 நாட்களில் 50 லட்சம் பார்வையிடல்களை எட்டியிருக்கிறது. இதற்கு முன்பு இந்த சாதனையைச் செய்திருப்பது 3 தமிழ்ப் படங்கள் மட்டுமே. ஒன்று ஷங்கரின் ஐ.
இப்படத்தின் டீஸர் 1 கோடியே 10 லட்சத்தையும், டிரைலர் 84 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையிடல்களையும் பெற்றிருக்கிறது. அதேபோல் கௌதம், அஜித்தின் படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் 53 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது.
ரஜினியின் ‘லிங்கா’ டிரைலர் 52 லட்சங்களைத் தாண்டியிருக்கிறது. தற்போது ‘புலி’ டீஸரும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது.
ORGINAL POST: CINEULAGAM