சென்னை: கமல்- கவுதமி நடிப்பில் கடந்த வரம் வெளிவந்த பாபநாசம் திரைப்படம் வசூலில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரிஷ்யம் திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கமலின் நடிப்பில் பாபநாசமாக உருவெடுத்தது. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 750க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நாளில் மட்டும் சுமார் 8 கோடியை வசூலித்து சாதனை புரிந்த பாபநாசம் இந்த மூன்று நாளில் இதுவரை 25 கோடியைத் தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 16 கோடியை பாபநாசம் வசூலித்து இருக்கிறது, நான்காவது நாளான இன்று 4 கோடி ரூபாய் வரை படம் வசூலிக்கலாம் என்று கூறுகிறார்கள். எனினும் நாளைக் காலையில் தான் படத்தின் மொத்த வசூல் நிலவரம் எவ்வளவு என்று சரியாகத் தெரியவரும். வசூலில் இதே வேகத்தில் சென்றால் 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை, பாபநாசம் தட்டிச்செல்லக்கூடும்.
ORIGINAL POST: TAMILFLIMBEAT